கடற்கரையோரம் கடல் மட்டம் 8.5 செ.மீ. உயர்ந்துள்ளது – சுற்றுச்சூழல் அமைச்சர்

கடற்கரையோரம் கடல் மட்டம் 8.5 செ.மீ. உயர்ந்துள்ளது – சுற்றுச்சூழல் அமைச்சர்

கடந்த 50 ஆண்டுகளில் இந்திய கடற்கரையோரம் கடல் மட்டம் 8.5 செ.மீ. உயர்ந்துள்ளது என சுற்றுச்சூழல் அமைச்சர் பாபுல் சுப்ரியோ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்ந்து சென்னை மூழ்குமா? – மத்திய மந்திரி பதில்

பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்ந்து சென்னை மூழ்குமா? - மத்திய மந்திரி பதில்
பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்ந்து சென்னை உள்ளிட்ட கடற்கரை நகரங்கள் மூழ்குமா? என்பதற்கு மத்திய மந்திரி பபுல் சுப்ரியோ மாநிலங்களவையில் பதில் அளித்தார்.

மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, 2100-ம் ஆண்டுக்குள் புவி வெப்பமயமாவதால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடல் மட்டம் உயர்ந்து சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கடற்கரை நகரங்கள் மூழ்கும் நிலை ஏற்படும் என்று ஐ.நா. பருவநிலை மாற்றத்துக்கான நிர்வாக குழு எச்சரித்துள்ளதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு எழுத்துமூலம் பதில் அளித்து மத்திய சுற்றுச்சூழல் இணை மந்திரி பபுல் சுப்ரியோ கூறியதாவது:-

இந்திய கடற்கரை பகுதிகளில் கடல் மட்டம் வருடத்துக்கு சராசரியாக 1.70 மில்லிமீட்டர் என்ற விகிதத்தில் உயர்ந்து வருவதாக கருதப்படுகிறது. அப்படியென்றால் கடந்த 50 ஆண்டுகளில் இந்திய கடற்கரை பகுதிகளில் கடல் மட்டம் 8.5 சென்டிமீட்டர் உயர்ந்திருப்பதாக அர்த்தம்.

செயற்கைகோள் தொழில்நுட்பம் மற்றும் நவீன ஆய்வுகள் வடக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் இதில் மாறுபாடு உள்ளதை வெளிப்படுத்தி உள்ளது. 2003-2013 காலகட்ட 10 ஆண்டுகளில் இந்த பகுதியில் கடல் மட்டம் ஆண்டுக்கு 6.1 மி.மீ. என்ற விகிதத்தில் உயர்ந்துள்ளது.

சுனாமி, புயல் சுழற்சி, கடற்கரை வெள்ளம், கடல் அரிப்பு போன்ற மோசமான நிகழ்வுகளாலும் கடல் மட்டம் உயர்ந்து கடற்கரையில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கும் அபாயத்தை ஏற்படுத்தும். ஆனாலும் கடல் மட்டம் உயருவதால் கடற்கரை பகுதிகள் வெள்ளத்தால் மூழ்குமா என்பதை அந்த பகுதியின் கடல் மட்டத்துக்கு மேலே உயரும் அளவை வைத்து மதிப்பிட வேண்டும்.

இந்த கடற்கரை பகுதிகளில் நிலப்பகுதி மூழ்கிவிட்டதாகவோ அல்லது ஆய்வில் மூழ்கியது தெரியவந்ததாகவோ நீண்டகால புள்ளிவிவரங்கள் எதுவும் இதுவரை இல்லை. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் மட்டம் உயரும் விகிதத்தை உறுதியாக கூறமுடியாது.

உதாரணத்துக்கு, டைமண்ட் துறைமுகத்தில் கடல் மட்டம் உயரும் விகிதம் அதிகமாக இருப்பதற்கு அங்கு பெரிய அளவில் நிலப்பகுதி புதைந்ததும் ஒரு காரணம். அதேபோல கண்ட்லா, ஹால்டியா, போர்ட்பிளேர் ஆகிய இடங்களுக்கும் இது பொருந்தும். இவ்வாறு பபுல் சுப்ரியோ கூறினார்.

Source : https://www.dailythanthi.com/News/TopNews/2019/11/19175349/Sea-level-along-Indian-coast-rose-by-85-cm-in-last.vpf

Massive crack in earth opens up in Kenya

நிலம் வனம் இழப்பின்றி சுரங்க பணியை தொடரலாம்.

கனிமம் இன்றி மனித வளர்ச்சி இல்லை. சுரங்க தொழிலை முறையாக செய்வதன் மூலம் நிலத்தையும் வனத்தையும் இழக்காமல் வளர்ச்சி பாதைக்கு செல்லலாம் என்பதை FIMI தெளிவாக விவரிக்கிறது.

 

தாதுமணலால் கேன்சர் இல்லை என்பதை விளக்கும் வீடியோ

Sand Waterfall – Extreme Nature

இயற்கை சீற்றம்

தண்ணீருக்கு அலையும் மிருகங்கள்.

ஒரு யானை தன் வாழ்நாளில் 18,25,000 மரங்கள் வளர காரணமாகிறது

இனி வரும் காலங்களில் இதுவும் இல்லாமல் போகும். ஆதலால் மரம் நடுவோம்.

புவி வெப்பமயமாதலை தடுக்கவில்லை என்றால் இம்மாதிரி இயற்கை பேரிடர்கள் இந்தியாவிலும் விரைவில் ஏற்பட வாய்ப்பு உண்டு

Moment 100 metre high wall of sand SWALLOWS city in seconds – Video

THE ASTONISHING moment a 100-metre high wall of sand ploughed straight through the heart of a busy city has been caught on video.


A northern Chinese city was consumed by the mighty sandstorm which slammed into the city of New Barag Right Banner in Inner Mongolia today, damaging traffic lights and choking the streets in dust within seconds. Fierce winds channelled the clouds through the city, reducing visibility to less than 100 metres. The city of New Barag Right Banner is under the administration of Hulunbuir, a sparsely populated grassy plateau in Inner Mongolia’s northernmost region.

This is the second sandstorm in a week to hit Hulunbuir city, according to Chinese reports.

Today’s adverse weather prompted China Meteorological Administration to issue a level six alert for gale-force winds.

Last Monday afternoon, the meteorological administration issued a yellow sandstorm warning as well as an advisory warning of dry weather and a risk of fire, telling residents to take precautions.

 

Link : https://www.express.co.uk/news/weather/1120636/china-extreme-weather-sandstorm-gobi-desert-inner-mongolia-video